;
Athirady Tamil News

பள்ளிப்பாளையம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி தறிதொழிலாளி கொலை..!!

0

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜூவ் (வயது 65). தறிதொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி ஆனந்த்(60) என்பவர் தனது வீட்டில் நாய்க்குட்டி ஒன்று வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜூவ் பசியால் வாடும் அந்த நாய்க்குட்டிக்கு பசியை தீர்க்க வேண்டி தினமும் பசும்பால் வாங்கி, அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொடுத்து வந்தார். இது நாய்க்குட்டியின் உரிமையாளர் ஆனந்த்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வழக்கம் போல் ராஜூவ் நேற்று மாலையில் பசியால் வாடிய அந்த நாய்க்குட்டிக்கு பால் வாங்கி கொடுத்தார். அப்போது அங்கு வந்த ஆனந்த் நீ ஏன்? என்னுடைய நாய்க்குட்டிக்கு பால் வாங்கி கொடுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபம் அடைந்த ஆனந்த் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து வந்து ராஜூவ்வின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தலை உடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று காலையில் ராஜூவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ஆனந்த்தை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்க்குட்டிக்கு பால் கொடுத்ததற்காக தறிதொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் ஆலாம்பாளையம் பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + sixteen =

*