;
Athirady Tamil News

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமெரிக்க முன்னாள் மந்திரி ஹிலாரி கிளிண்டன்..!!

0

அமெரிக்காவின் முன்னாள் மந்திரியான ஹிலாரி கிளிண்டன் 3 நாள் பயணமாக நேற்று மத்தியப்பிரதேசத்திற்கு வந்தார். முதல் நாள் மகேஷ்வரி நகருக்கு சென்றார். அங்கு தயாரிக்கப்படும் மகேஷ்வரி சேலை வேலைப்பாடுகளை பார்வையிட்டார். மேலும், படகு சவாரி செய்தார்.

இந்நிலையில், இன்று அம்மாநிலத்தின் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கிளிண்டன் சுற்றி பார்த்தார். மாண்டு நகரில் உள்ள பழங்கால அரண்மனையான ஜாகஸ் மகாலிற்கு சென்றார். அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

அதன்பின் ஹிண்டோலா மகால், ஹோசங் ஷா,மஹ்பாரா மற்றும் ஜாமா மஸ்ஜித் போன்ற இடங்களை சுற்று பார்தார். பின்னர் மகேஷ்வர் நகரில் இருந்த அழைத்து வரப்பட்ட சமையல் காரர்கள் செய்த உணவை கிளிண்டன் உண்டார். அவர் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுடன் விளையாடினார்.

இதையடுத்து, கிளிண்டன் நாளை காலை இந்தோருக்கு சென்று அங்கிருந்து ஜோத்பூருக்கு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கிளிண்டன் அமெரிக்கா செல்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 4 =

*