;
Athirady Tamil News

மனைவியின் அஜாக்கிரதை: மார்சுவரிக்கு சென்று இரண்டாவது முறையாக உயிரை விட்ட கணவர்..!!

0

கணவர் இறந்துவிட்டதாக கருதி மனைவி அவர் உயிருடன் இருக்கும் போது மார்ச்சுவரிக்கு கொண்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த தம்பதி சென்-ஹாங். இதின் கணவரான ஹாங்கிற்கு வயிற்றில் புற்று நோய் ஏற்பட்டதால் சென் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முடியாது என்று கூறியதால், கணவர் இறந்துவிட்டதாக கருதி சென் அவரின் உடலை மார்சுவரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

மார்சுவரிக்கு கொண்டு சென்ற போது, அவரது உடலில் அசைவுகள் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவ்வளவு நேரம் உயிருடன் இருந்த ஹாங், துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் விரைந்து வந்து சோதனை செய்துக் கொண்டிருந்த நேரத்தில் உண்மையில் மரணம் அடைந்தார்.

இதில் சென் தவறுதலாகவே கணவர் இறந்துவிட்டதாக எண்ணி பிணவறைக்கு கொண்டு வந்தது தான் காரணம் எனவும், இன்னும் சில நாட்கள் அவர் வாழ்ந்திருப்பார் என்று அவர் காதில் படும் படி சிலர் கூறி வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 2 =

*