;
Athirady Tamil News

வடக்கில் வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம்…!! (படங்கள்)

0

வடக்கில் வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பில் அவர்களுடன் கைகோர்த்து தீர்வு கண்டு வருகிறோம்! வியர்வைத் துளிகள் கூட்டமைப்பு.

வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் இன்று (12) கூட்டமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமிலா துசாரி தலமையில் வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அறிவின் மூலம் வளர்ச்சியை நோக்கி எனும் தொனிப்பொருளில்’ நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சமிலா துசாரி

வியர்வை துளிகள் கூட்டமைப்பினர்'(டாபிந்து கூட்டியக்கம்) கடந்த 34 வருடங்களாக கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும்; பெண் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் முன் நின்று செயற்படும் ஒரு நிறுவனமாகும்.

விசேடமாக ஆடை உற்பத்தி துறையிலே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராய்வதுடன் அவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்துவது ,தலைமைத்துவ பயிற்சி பட்டறைகள் ஊடாக அவர்களை தெளிவு படுத்தி ஒன்று திரட்டியும் வருகின்றோம்.

கடந்த இரண்டு வருடங்களாக வடக்கில் வவுனியா மற்றும் மன்னார் போன்ற இடங்களில் வேலை செய்யும் பெண்கள் தொடர்பிலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராய்ந்து அப்பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவதுடன் அவர்களுடன் கை கோர்த்து பெண்களை முன்னேற்றுவதற்கான பல வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + five =

*