;
Athirady Tamil News

திருகோணமலையில் அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டில் மூவர் படுகாயம்…!!

0

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர்
கிராமத்தில் இடம்பெற்ற அசிட் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில்
மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு
முதலில் அசிட் வீசப்பட்டுள்ளது. இதனை அவதானித்த அவரது சகோதரர்கள் அசிட்
வீசிய நபரைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.

விபரீதத்தை உணர்ந்த அசிட் வீசியவரின் சகபாடிகள் ஓடிச் சென்று அசிற் வீசிய
நபரை எவரும் பிடித்துக்கொள்ளாதவாறு காப்பாற்றுவதற்காக துரத்தி வந்தவர்கள்
மீது சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த வன்முறைகள் தற்போது
திருகோணமலைக்கும் விரிவடைந்திருப்பது குறித்து பொது மக்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*