;
Athirady Tamil News

வலி.வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட பாடசாலைகளை பார்வையிட்டார் பா.கஜதீபன்…!! (படங்கள்)

0

வலி.வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட பாடசாலைகளை பார்வையிட்டார் பா.கஜதீபன் – குறைகளை நிவர்த்திப்பதாக உறுதி

அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட பிரதேசமான வலி.வடக்கு பிரதேசங்களான தையிட்டி, ஊரணி பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப்பார்வையிட்டுள்ளார்.

அண்மையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வடமாகாணசபை உறுப்பினர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவு செய்யப்பட்ட தவிசாளரான சோ.சுகிர்தன் ஆகியோர் ஊரணி கனிஷ்ட வித்தியாலயம், தையிட்டி கணேசா வித்தியாசாலை மற்றும் தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அதிபர்களுடன் கலந்துரையாடி நிலைமைகளைப்பார்வையிட்டனர்.

கட்டிடப்பற்றாக்குறை, ஆசிரியர்கள் இன்மை, குடிநீர்ப்பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை அதிபர்கள் மாகாணசபை உறுப்பினரிடம் எடுத்துக்கூறினர்.

இதுகுறித்து விரைவில் தீர்வுகளைப்பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகவும், உரிய தரப்புகளின் கவனத்துக்கு இது தொடர்பாக எடுத்துரைப்பதாகவும் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*