;
Athirady Tamil News

யாழில் புறாக்களுக்கு இடையிலான பந்தயம்…!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்தில் புறாக்கள் இடையிலான பந்தயப் போட்டியின்
வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வொன்று யாழ். நகரில் உள்ள
விடுதியில் இடம்பெற்றது.

உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான இப்போட்டி யாழ். பந்தயப்
புறாக்கள் கழகத்தின் ஏற்பாட்டிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை)
இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மருத்துவர் கே.சுரேஸ்குமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு
125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயத்தில் வெற்றிபெற்ற புறாக்களின்
உரிமையாளர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

அவர் இங்கு கூறுகையில், “மேற்கு நாடுகளில் இது ஒரு தொழில்முறைப் பந்தயமாக
இருக்கிற போதும் அதில் ஈடுபடுவது இலகுவானதல்ல. மற்றைய வேலைகளுக்கு
மத்தியில் பகுதிநேரமாக பந்தயப் புறா வளர்ப்பிலும் ஈடுபடுவதென்பது
சவாலானது. முதலில் மிக வேகமாகப் பறக்கும் புறாக்களை அடையாளம் கண்டு
அவற்றிலிருந்து சிறந்த பரம்பரை வரிசையை உருவாக்குவதில் அக்கறை
காட்டவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புறாவளர்ப்புக்காரர்கள் எல்லோரும் ஒற்றுமையோடு
கவனம் செலுத்தவேண்டும். இப்போது வரைக்கும் அத்தகைய சிறந்த பரம்பரை வரிசை
ஒன்று இலங்கையில் இல்லை. தமிழ் நாட்டில் புறாச் சேதுவிடம் அத்தகைய சிறந்த
பரம்பரை வரிசை உண்டு. அதுபோன்றதொரு நிலையை இங்கும் உருவாக்குவதில்
முதலில் கவனம் செலுத்தப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இக்கழகத்தைச் சேர்ந்த ரி.பி.அன்ரன் கூறுகையில், “புறாப் பந்தயங்கள்
உலகின் பல நாடுகளிலும் பல மில்லியன் டொலர் பரிசுகளை அள்ளிக்கொட்டும் ஒரு
விளையாட்டாகும். அண்மையில்தான் இங்கு பந்தயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.
கண்டியில் உள்ள புறா ஆர்வலர்கள் சேர்ந்து முதன் முதலில் புறாப் பந்தயத்தை
தற்போது நடத்தி வருகின்றனர்.

வடக்கில் முதல் தடவை என்பதால் குறிப்பிட்டளவு புறாக்களே பந்தயத்தில்
ஈடுபட்டன. எதிர்காலத்தில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் புறாப் பந்தயக்
கழகங்களை உருவாக்கி பந்தயங்களை நடத்த ஆர்வம் உள்ளவர்களுக்கு
ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இப்போட்டியில், குருநகரைச் சேர்ந்த எம்.அஜித் குமாரின் இரு புறாக்கள் ஒரு
மணி 40 நிமிடங்களில் பந்தயத் தூரத்தைக் கடந்து முதல் பரிசைத் தட்டிச்
சென்றன. சங்கானையைச் சேர்ந்தவரான ரி.நிதர்சனின் புறா மூன்றாம் இடத்தையும்
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.காந்தரூபனின் புறா நான்காவது இடத்தையும்
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த எஸ்.பிரியதர்ஸனின் புறா ஐந்தாவது இடத்தையும்
பெற்றுக்கொண்டன.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*