;
Athirady Tamil News

கொழும்பு பாணந்துறை பகுதியிலிருந்து விமானத்தின் பாகங்கள் மீட்பு…!!

0

கொழும்பை அண்மித்த பாணந்துறை – அளுபோமுல்ல பிரதேசத்தில் வைத்து விமானமொன்றின் உதிரிப்பாகங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று திங்கட்கிழமை பகல் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவற்றை கைப்பற்றியிருக்கின்றனர்.

முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவரது இல்லத்தில் மறைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள விமான உதிரிப்பாகங்கள், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டவை என்று ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twenty =

*