இந்தியா அணியுடனான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மாற்றம்…!!

முத்தொடர் போட்டிக்கான இலங்கை அணியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்குபற்றும் இலங்கை நாட்டின் சுதந்திர கிண்ண முத்தொடர் போட்டிகள் கடந்த 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில், 3 அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று 4 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் முன்னர் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய 3 ஆவது போட்டியில், இலங்கை அணி 4 ஓவர்கள் பந்து வீச்சை தாமதமாக மேற்கொண்டதால், இலங்கை அணித்தலைவருக்கு 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அணிவீரர்களுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 60 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை அணித்தலைவர் சந்திமலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அணியின் தற்காலிக தலைவராக அதிரடி ஆட்டவீரர் திஸார பெரேரா அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.