;
Athirady Tamil News

சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடையும் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்பு…!!

0

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை
ஒன்றும் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் சாவகச்சேரிப்பகுதியில்
இடம்பெற்றுவருகின்றது.

இதற்கென குழாய் பொருத்துவதற்கான அகழவுப் பணி இன்று
(12.03.2018) மாலை குறித்த பகுதியில் இடம்பெற்றபோதே விடுதலைப் புலிகள்
பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும் சீ4 (c4) வெடிமருந்துகளும்
மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு
அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eleven =

*