;
Athirady Tamil News

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் ராகுல் காந்தி சந்திப்பு..!!

0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவியுடன் இந்தியாவிற்கு 4 நாள் அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா – பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனிருந்தார். அந்த சந்திப்பின் போது, ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பாக பேசப்பட்டது என வெளியான செய்திகள் தவறானவை. உலகளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாறுபாடு குறித்து பேசப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. உண்மைகளை மறைக்கிறது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − five =

*