;
Athirady Tamil News

நாடு சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளது: ஜி.எல்.பீரிஸ்…!!

0

கண்டி சம்பவம் தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காது நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கையை நாடு இழந்துள்ளது என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பின்விளைவுகளை சிந்திக்காது அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் சிறுபான்மைத்தனமாக உள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை ஏன் பிரகடனப்படுத்த வேண்டும். நாட்டின் ஒரு பகுதியில் பதற்றம் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக செயற்பட வேண்டியது அவசியம். ஆனால், அக்குறித்த பகுதியில் மாத்திரம் அவசரகால நிலையை பிரகனப்படுத்தியிருக்கலாம். அதைவிடுத்து நாடு பூராகவும் அவவசகால நிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் சர்வதேசம் எமது நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளது.

அதுமாத்திரமின்றி உரிய நேரத்தில் அரசாங்கம் அதிரடியாக செயற்பட்டிருப்பின் இந்த அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.

ஆனால் அரசாங்கத்தின் இச்செயற்பாடானது எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றிவரும் சுற்றுலாத்துறைக்கு பாரிய அடியாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*