;
Athirady Tamil News

பாதாள உலக குழு தலைவரின் மகள் கைது…!!

0

கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான சொத்தி உபாலியின் மகள் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகம வெல்மில்ல பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*