;
Athirady Tamil News

முஸ்லிம்கள் மீது தாக்குதல்: வளைகுடா நாடுகள் எடுத்த கடும் முடிவு…!!

0

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, வளை குடா நாடுகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவா செல்ல தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட அந்த ஊடகம்,

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நீதி கோரும் வகையில் வளைகுடா நாடுகள் அணிதிரண்டுள்ளன. எதிர்வரும் ஜெனீவா மனித உரிமை மாநாட்டின்போது இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை வளைகுடா நாடுகள் முன்வைக்கவுள்ளன.

இதன்படி, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் தொடர்பில் வளைகுடா நாடுகள் கடும் வருத்தம் தெரிவிப்பதாக தங்கள் தூதுவர்கள் ஊடாக இலங்கைக்கு அறிவித்துள்ளன என்று அந்த ஊடமக் கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான கொண்டுவரப்பட்ட யோசனைக்கு, வளைகுடா நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − ten =

*