;
Athirady Tamil News

பேஸ்புக் தடை குறித்து பேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ள புதிய தகவல்…!!

0

கண்டி வன்முறைகளையடுத்து இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் மிகுந்த அவதானம் செலுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது.

இதன்படி, பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சங்கடத்திற்குரியதும் சர்ச்சைக்குரியதுமான கருத்துக்கள் மற்றும் முற்படுத்தல்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இன வன்முறையை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து பேஸ்புக் வலைத்தளத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + three =

*