;
Athirady Tamil News

அடுத்த நடவடிக்கை என்ன? மஹிந்த தலைமையில் கொழும்பில் முக்கிய பேச்சு…!!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் விஜேராமயவில் நடைபெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கடந்த வாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவிருந்தது.

எனினும் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் நாட்டில் நிலவிய நெருக்கடி காரணமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரதமருக்கு எதிரான இந்தத் தீர்மானம் மீண்டும் கொண்டுவருவது மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகிய உறுப்பினர்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய தினம் நடைபெறுகின்ற கலந்துரையாடலில் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*