;
Athirady Tamil News

பிரிகேடியர் பிரியங்க சீனா சென்ற இரகசியம்…!!

0

தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய விவகாரத்தில் நாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் 5 மாதங்களுக்கு பிரிகேடியர் பிரியங்கவுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

எனினும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவிலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினிடையே பிரித்தானிய தூதரக பாதுகாப்பு பணிகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார்.

பிரிகேடியரின் இந்தச் செயற்பாடு தொடர்பாக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியாகியதோடு முறைப்பாடுகளும் குவிந்தன.

இதனையடுத்து அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பதவி விலக்கப்பட்டு மீண்டும் பதவியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் எதிர்ப்புக்கள் மேலும் வலுப்பெற்றன.

நிலைமையை சமாளிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிரிகேடியர் பிரியங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சீனாவில் வழங்கப்படவுள்ள பயிற்சிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறுகின்றது.

தொடர்புபட்ட செய்திக்கு…

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி..! (வீடியோ) -இது எப்படி இருக்கு-

லண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்..!! (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.

“நான் ஏன், அப்படி செய்தேன்?”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்!

இராணுவத்துக்கு அஞ்சும் அரசாங்கம்…!! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம்..!! (படங்கள் & வீடியோ) இது எப்பிடி இருக்கு

பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க இராணுவம் தீர்மானம்…!! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*