;
Athirady Tamil News

ஜெனீவா செல்லவில்லை காரணம் கூறுகின்றார் – சி.வி.விக்னேஸ்வரன்…!!

0

ஜெனீவாவில் இடம்பெரும் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத்தொடரில் தமது பிரதிநிதிகள் சகல விடயங்கைளயும் எடுத்துரைப்பார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா விவ­காரம் அடுத்த வாரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்தக் கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்கு ஸ்ரீலங்காவிலிருந்து அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் செல்லவுள்ளனர்.

இந் நிலையில் வேலைப்பளு காரணமாக தான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமது பிரதிநிதிகள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் எனவும் அவர். நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு ஜெனீவாவுக்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்றிருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின் மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*