;
Athirady Tamil News

ஐந்து மீனவர்கள் இந்தியாவில் கைது; மூன்று மீனவர்கள் மாயம்…!!

0

ஸ்ரீலங்காவில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில் மீன்பிடி நடவடிக்கைகாகச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவு – நாயாறு பகுதியிலிருந்து இவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சிலாபம் பகுதியைச் சேர்ந்த குறித்த மூன்று மீனவர்களையும் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா மீனவர்கள் ஐவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோரக் காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொடியக்கரை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலைப் பகுதியிலிருந்து கடந்த 28ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − six =

*