;
Athirady Tamil News

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் – உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்..!!

0

ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் 12 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கார்த்தி சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்று முடிந்ததையடுத்து, நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை வரும் 24 ஆம் தேதி நீதிமன்றக்காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் அண்மையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வரும் 20 ஆம் தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிப்பதாகவும், மனு மீதான விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால் தங்களிடம் விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + five =

*