;
Athirady Tamil News

வெளிநாடு செல்லும் ஜனாதிபதி, பிரதமர் பயணத்துக்கு அதிநவீன தனி விமானங்கள்..!!

0

ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடு சுற்றுப் பயணத்துக்கு தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிகள் விமானத்தையே கூடுதல் வசதிகள் செய்து தனி விமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பயணத்துக்காக பிரத்யேக சிறப்பு விமானங்கள் வாங்க மத்திய பட்ஜெட்டில் ரூ.4469 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்படி இரண்டு 777-300 போயிங் ரக விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது. அந்த விமானங்களில் அதிநவீன வசதிகள் செய்யப்படுகிறது.

போயிங் விமானத்தில் வை-பை வசதி, ஏவுகணைகள் துளைக்காத பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வடிவமைப்பு பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ஜனாதிபதி, பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எரிபொருள் நிரப்புவதற்காக தனி விமானங்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் தரையிறக்க வேண்டியுள்ளது.

ஆனால் அதிநவீன விமானங்களில் பறந்தபடியே எரிபொருள் நிரப்ப முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 10 =

*