இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்…!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
மார்ச் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறினார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையி விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88,573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.