;
Athirady Tamil News

பெங்களூரு சிறையில் தோட்ட வேலையில் ஆர்வம் காட்டும் சசிகலா..!!

0

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் சசிகலா வி.ஐ.பி. அந்தஸ்து கைதி என்பதால் அவர் சிறையில் வெள்ளை சீருடை அணிவதில்லை. அவர் விரும்பிய ஆடைகள் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சசிகலா வண்ண சீருடை அணிந்து சிறையில் உலா வருகிறார். சசிகலா சிறையில் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, என்றாலும் அவர் தோட்ட வேலையில் ஆர்வம் காட்டுகிறார்.

பெண்கள் சிறை அருகே உள்ள தோட்டத்தில் பச்சை மிளகாய், கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பப்பாளி மரங்களும் உள்ளது. காளான் வளர்க்கப்படுகிறது. இது தவிர தர்பூசணி கொடி படர விடப்பட்டுள்ளது. தர்பூசணி பழம் பறிக்கும் வேலையையும், காளான் சேகரிக்கும் பணியையும் சசிகலாவும், இளவரசியும் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.

இதற்காக அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ. 30 வீதம் கூலி வழங்கப்படுகிறது. இது தவிர சிறையில் வளையல் செய்வது, மணிகள் கோர்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் இவர்கள் இருவரும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இளவரசி கன்னடம் கற்று நன்றாக பேசி வருகிறார். சசிகலா தொடர்ந்து கன்னடம் கற்று வருகிறார். கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்று வருகிறார்.

கடந்த வாரம் சிறைக்கு ஆய்வுக்கு வந்த தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மாவுக்கு தான் செய்த வளையல்களை சசிகலா பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் சிறையில் உள்ள சுதாகரன் எந்த வேலையும் செய்வதில்லை. தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fifteen =

*