;
Athirady Tamil News

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது…!!

0

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களிடையே திடீரென பரவிய சின்னம்மை நோயின்
காரணமாக பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் 35க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 27 பேர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தவர்களெனவும், ஏனையோர்
தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்களெனவும் அப்பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் சின்னம்மை நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 3 =

*