;
Athirady Tamil News

முல்லையில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது…!! (படங்கள்)

0

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த
மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.

முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் கடற்தொழிலுக்கு ஒரு படகில் சென்ற
மூன்று மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

நேற்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து 3 மீனவர்கள் ஒரு
படகில் தொழில் நடவடிக்கைக்கு சென்றுள்ளார்கள்

சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய
,மானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை
சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக
சென்றுள்ளார்கள்

இவர்கள் நேற்று 12 நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும்
இதுவரை கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லை என முல்லைத்தீவு
பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னிலையில் இன்று 13 காலை நாயாற்று பகுதியினை சேர்ந்த 9 மீனவ படகுகள்
காணாமல் போன மீனவரின் படகினை தேடி கடலுக்குச் சென்றுள்ளனர்.

இருப்பினும் இதுவரையில் காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் எந்த தகவலும்
கிடைக்கவில்லை. தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*