;
Athirady Tamil News

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடுகள்…!!

0

இலங்கையில் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார போஸாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர், ராஜித சேனாரத்ன தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றிக் குறிப்பிட்ட அவர்,

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா அவுஸ்திரேலியா சீனா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும் நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளது” என்றார் அமைச்சர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 8 =

*