;
Athirady Tamil News

பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்: மின்தடை ஏற்படலாம்…!!

0

பூமியை நோக்கி வரும் சூரியப் புயல் இன்று பூமியை மோதலாம் என்று NOAA தெரிவித்துள்ளது.

இதனால் சேட்டிலைட்டுகள் பாதிக்கப்படலாம் என்றும் மின்தடை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் ஒரு வெடித்தலால் ஏற்படும் பிழம்பு பூமியின் காந்த மண்டலத்தைத் தாண்டி பூமியை வந்தடையலாம்.

இதனால் விமான சேவையும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரேடியோ அலைகளும் GPS சேவைகளும் கூட பாதிக்கப்படலாம். டிரான்ஸ்ஃபார்மர்கள் நிரந்தரமாக செயலிழக்கும் வாய்ப்பும் உள்ளது.

சூரியப்புயலின் இன்னொரு விளைவாக ஸ்காட்லாந்து மற்றும் வட பிரித்தானியாவில் வடக்கு ஒளிகளும் தோன்றலாம்.

என்றாலும் மனித உயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*