;
Athirady Tamil News

உயிர் காத்த வைத்தியர் வீட்டிற்கே உலை வைத்த மோசமான இளைஞர்கள்…!!

0

உயிரை மீட்டுத் தந்த வைத்தியர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் நுவரெலியா மாவட்டம் கம்பளையில் இடம்பெற்ருள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இரண்டு கொள்ளைக்கார இளைஞர்களினதும் தந்தை கடுமையான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு கம்பளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அதன்போது அவரை மிகுந்த அக்கறையுடன் வைத்தியர் ஒருவர் மருத்துவச் சிகிச்சையளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த வைத்தியரின் அர்ப்பணிப்பான சேவையால் நோயாளி குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நோயாளியின் இரண்டு மகன்களும் குறித்த வைத்தியரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதானவர்கள் என்றும் இவர்களைத் தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுக்குப் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கொள்ளைச் சந்தேக நபர்கள் இருவரும் சுமார் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் களவாடியதாகவும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள குறித்த இரண்டு இளைஞர்களும் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக தண்டனை அனுபவித்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*