;
Athirady Tamil News

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

0

குடாகம மயானப் பகுதியிலே விற்பனைக்காக வைத்திருந்த 63 கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று (14) காலை ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹட்டன் பொலிஸாரால் மேற்கொண்ட சுற்றிவலைபின் போதே குறித்த சந்தேக நபர் ஹட்டன் குடாகம பகுதியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + two =

*