;
Athirady Tamil News

உடைக்கப்பட்ட பாடசாலை மதில் மீள் நிர்மானம்…!! (படங்கள்)

0

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் மைதான காணியில் அமைக்கப்பட்ட சுற்று மதில் நேற்று முன்தினம்(12) இரவு விசமிகளால் உடைக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் விமானப்படையினரால் மீள்நிர்மானம் செய்யப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வருகை தந்த போது கனகபுரம் பாடசாலை சமூகத்தினரால் பாடசாலை மைதானத்திற்குரிய காணிக்கு சுற்று மதில்அமைத்து தருமாறு கோரி கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆயிரத்து 600 அடி நீளமான மதில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஓதுக்கீட்டின் கீழ் நாற்பது இலட்சம் ரூபா செலவில் விமானப்படையினரால் அமைக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த மதில் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பாடசாலை சமூகத்தினரால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திலம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மதில் இன்று காலை முதல் விமானப்படையினரால் மீண்டும் மீள்நிர்மானம் செய்யப்பட்டு வருகிறது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + seventeen =

*