;
Athirady Tamil News

மாணவா் சோ்க்கையின் போது மேலதிக பணம் சேர்க்கும் அதிபர்கள் மீது நடவடிக்கை…!!

0

பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது மாதம் 50 ரூபாய் வீதம் வருடத்திற்கு 600.00 ரூபாய் பெற்றுக்கொள்வதோடு பெற்றோருக்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும்.

அவ்வாறு பற்றுச்சீட்டு வழங்காத அதிபர்களுக்கும், மேலதிகமாக பணம் சேர்க்கப்படும் அதிபர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் கூறினார்.

2018ம் ஆண்டிற்கான நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி. சுஜீவா போதிமான்ன தலைமையில் நுவரெலியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணைத்தலைவர்களாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் இணைத்தலைவர்களுமான எஸ்.பி. ரத்னாயக்க, பியசிரி ஆகியோர் உட்பட பல அரச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. இதில் பாடசாலை செல்லாத மாணவர்கள் அநேகமானோர் இருப்பதாக சபையில் கூறியதை அடுத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு அரச பாடசாலைகளிலும் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது அதிக பணம் கேட்பதால் சேர்க்க முடியாதுள்ளது எனவும் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

இதற்குரிய காரணம் என்ன என இணைத்தலைவர்கள் நுவரெலியா வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் அவரின் வினவியபோது, அதற்கு பதில் வழங்கிய எஸ். மோகன்ராஜ் அதற்கு மறுப்பு தெரிவித்தார். பாடசாலை மாணவர்களிடம் வருடத்திற்கு ரூ. 600.00 மட்டுமே அறவிடப்படுகின்றது.

மேலதிகமாக அறிவிடப்படுவதாக இதுவரையில் எங்களுக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். அவ்வாறு பற்றுச்சீட்டு தராதவர்கள் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிங்கள, தமிழ் அரச பாடசாலைகளில் பணம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை சட்டம் அல்ல இது தொடர்பில் சரியாக தேடிப்பார்த்து அடுத்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.

அத்தோடு நுவரெலியாவிலே குழாய்கிணறு தனிப்பட்ட தேவைகளுக்காக உல்லாச விடுதிகளிலும், தனிப்பட்ட விவசாய காணிகளுக்கும் பயன்படுத்துவதால் நுவரெலியாவில் பாரிய குடிநீர் பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படவுள்ளதாக ஊடகத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை கருத்தில்கொண்டு பிரதேச சபை அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனால் அச்சபையின் இணைத்தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நுவரெலியா பிரதேச செயலகம், நுவரெலியா மாநகர சபை, நீர்பாசன வடிகாலமைப்பு திணைக்களத்திற்கு பொறுப்புகள் வழங்கபட்டுள்ளன.

குழாய்கிணறு வசதிகளைப் பெற்றுள்ளவர்கள் விரிவான பட்டியல் எதிர்வரும் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டுமென இச்சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*