;
Athirady Tamil News

பெண் உட்பட 23 இந்தியர்கள் கைது; கொழும்புக்கு வந்து என்ன செய்தார்கள் தெரியுமா…?

0

கொழும்பில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண் உட்பட 23 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்ட 09 பேரும், துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 09 பேரும், கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்த 05 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை, செட்டியார் தெருவில் மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 20 =

*