;
Athirady Tamil News

புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் – சந்தேகத்தில் 06பேர் கைது..!!

0

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட புகையிரதத்தின் மீது ஏறாவூரில் வைத்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அறுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 அளவில் புறப்பட்ட கடுகடுதிப் புகையிரதம் ஏறாவூர் புகையிரத நிலையத்தை நெருங்கும்போது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் புகையிரதம் சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் புகையிரத நிலைய அதிபர் கே. குபேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக குறித்த கடுகதி புகையிரதம் ஏறாவூரிலிருந்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகியே கொழும்பு நோக்கி பயணித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையிரத என்ஜின் சாரதி மற்றும் உதவியாளரின் அறை, மற்றும் என்ஜினை நோக்கியும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக புகையிரத சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் புகையிரதத்திற்கும் ஏறாவூரில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + five =

*