;
Athirady Tamil News

ஆலய சூழலில் மது அருந்திய இளைஞர் யுவதிகளை விரட்டியடிப்பு…!!

0

ஆலய சூழலில் மது அருந்திய இளைஞர் யுவதிகள் பிரதேச வாசிகளால் விரட்டியடிப்பு! வவுனியாவில் சம்பவம்.

வவுனியாவில் குடியிருப்பில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் குளக்கட்டு பகுதியில் நேற்று (14) இரவு ஆண்களுடன் பெண்களும் இணைந்து மது அருந்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா குளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மூன்று இளைஞர்களுடன், மூன்று பெண்களும் இணைந்து மது அருந்திக்கொண்டு இருந்தபோது அவ்வீதியூடாகச் சென்ற இளைஞர்கள் சிலர் இதனை அவதானித்துள்ளதுடன் அவர்களிடம் யார் நீங்கள் ஏன் இவ்வாறு ஆலயப்பகுதியில் சீர்கேடான முறையில் நடந்துகொள்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து பெண்களுடன் மது அருந்திய நிலையிலிருந்த இளைஞர்கள்; தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இருந்தபோதும் பெண்களையும் அவ்விடத்திலிருந்து மது அருந்திய இளைஞர்களையும் எச்சரித்து அப்பகுதி இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர்.

இவ்வாறு ஆலய சூழலில் மது அருந்துவதும் அதில் பெண்களும் ஈடுபடுவதானது சமூக சீர்கேடுகளை மேலும் அதிகரிக்க செய்யும் எனவே இப்பகுதியில் பொலிசார் ரோந்துப்பணிகளை அதிகரிப்பதன் மூலம் சமூகச் சீர்கேடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

வவுனியா குடியிருப்பு பகுதியில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் பாடசாலை, சிறுவர் பூங்கா, சந்தைத் தொகுதி மற்றும் நெருக்கமாக மக்கள் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − six =

*