;
Athirady Tamil News

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞரை தேடும் பொலிஸ்…!!

0

அவுஸ்திரேலியாவில் ஓடும் ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

சிட்னியின் கிரானில்வில் பகுதிக்கு செல்லும் பரபரப்பான ரயிலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் அந்த ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் அருகாமையில் அமர்ந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சிறுமியுடன் பேச்சுக் கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுமி Parramatta ரயில் நிலையத்தில் இறங்கியதும் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், குறித்த நபரை தேடி வருகின்றனர்.

மேலும் அவர் தொடர்பில் கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளையும் வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − fifteen =

*