அவசர கால சட்டம் நீக்குவது குறித்து மைத்திரி நாடு திரும்பிய பின் முடிவு…!!

ஸ்ரீலங்காவில் 6 வருடங்களுக்குப் பின்னர் முதற்முறையான அமுல்படுத்தப்பட்ட அவசர காலச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்த தகவலை ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் செயலாளரான ஒஸ்டின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.
கண்டியில் அண்மையில் ஏற்பட்ட கலவர நிலைமை காரணமாக நாடு முழுவதிலும் அவசர காலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு கண்டி மாவட்டத்தில் மட்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.
நிலைமை வழமைக்குத் திரும்பியதை அடுத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் இதுவரை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து அறிவித்துள்ளார்.