;
Athirady Tamil News

தீயணைப்பு வீரரின் துணிவுகர செயல்! பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம்…!! -VIDEO-

0

சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை துணிச்சலாக காப்பாற்றிய தீயணைப்பு வீரர் சமூக வலைத்தளங்களில் ஹீரோவாக பார்க்கப்படுகின்றார்.

சீனாவின் நன்ஜிங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவர் அந்த குடியிருப்பின் 8 ஆவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி அமர்ந்துக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும் அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல்விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கியுள்ளார்.

கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர் ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை உதைத்து வீட்டிற்குள் தள்ளினார்.

தீயணைப்பு வீரரின் இந்த துணிகர செயலால் அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சீனாவின் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை முகப்புத்தகத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் குறித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு நெட்டிஷன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − eighteen =

*