நவாஸ் ஷெரீபின் வீட்டின் அருகே வெடிகுண்டு தாக்குதல்! 7 பேர் பலி…!!

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
லாகூரில் அவருக்கு சொந்தமாக இல்லம் உள்ளது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இல்லம் அருகே உள்ள நிசார் டபொலிஸ் செக் போஸ்ட்டில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயமடைந்த சிலரை பொலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.