;
Athirady Tamil News

கொடுத்த பணத்தை திருப்ப கேட்டதால் வெட்டி கொலை செய்யப்பட்ட வைத்தியர்…!!

0

பணத்தகராறு காரணமாக மருத்துவர் ஒருவரை அவருடைய உறவினர்களே கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று ஹூப்ளி வித்யாநகரில் இடம்பெற்றுள்ளமை அங்கு பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூப்ளி நர்சிங் ஹோமின் இயக்குனராக இருந்து வரும் வைத்தியர் பாபு ஹண்டேகர் என்பவர் கொடுத்த பணத்தை திருப்ப கேட்டபோது அவரின் உறவினர் நவீன் மல்லிகவுடர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து வைத்தியர் பாபுவை இரக்கமின்றி வெட்டி கொலை செய்துள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதையடுத்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையிலேயே இவரின் உறவினர் நவீன் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து கொலையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*