;
Athirady Tamil News

இலங்கையில் பெண் ஒருவர் கண்ட அதிர்ச்சி; மரத்தில் தொங்கிய வெள்ளை உருவங்கள்..!!

0

நுவரெலியா மாவட்டம் புஸ்ஸலாவ பிரதேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் வினோத சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர் சுமார் ஆறாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்தபோது அவை திருடர்களால் கொட்டிச் சிந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

குறித்த பெண், தனது வீட்டில் அந்தப் பொருட்களை வைத்துவிட்டு அயல் வீட்டிற்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது வாங்கி வந்து வைத்த பொருட்கள் கண்டபடி சிந்தப்பட்டிருப்பதை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது திருடர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்த குறித்த பெண் வீட்டைச் சுற்றியுள்ள சூழலில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.

இவ்வாறு தேடுதல் வேட்டையில் இறங்கியபோது அங்குள்ள மரம் ஒன்றில் வெள்ளை நிறத்தில் சில உருவங்கள் இருப்பதை அவதானித்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து கூர்ந்து அவதானித்தபோதுதான் அவை குரங்குகள் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்த குறித்த பொருட்களை கொட்டிச் சிந்தியது குரங்குகள் என்பது தெரியவந்ததையடுத்து அவ்விடத்தில் நின்ற அனைவரும் கலகலப்புக்குள்ளாகியுள்ளனர். குறித்த குரங்குகள் வீட்டிலிருந்த கோதுமை மா மூட்டையை பிய்த்து தமது தலையில் தப்பியது மட்டுமல்லாது ஏனைய பொருட்களையும் சிந்திவிட்டுச் சென்றதாக தெரியவந்தது.

இதேவேளை குறித்த பகுதியில் அண்மைக்காலமாக குரங்குகளின் சேட்டை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச வாசிகள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eighteen =

*