;
Athirady Tamil News

கண்டிக்கு விஜயம் செய்த ரவி கருணாநாயக்கவின் வியக்கவைத்த செயற்பாடு…!!

0

வன்முறைகள் இடம்பெற்ற கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கிவைத்தார்.

தெல்தெனிய பிரதேசத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, உயிரிழந்த சிங்களக் குடும்பஸ்தரது குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு நிரந்தர வருமானம் வரும்வரை மாதாந்தம் 20,000 ரூபாவை வழங்கவும் வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

இதேபோன்று திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்திற்கு மத்தியில் உயிரிழந்த முஸ்லிம் இளைஞரது குடும்ப அங்கத்தவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சந்தித்தார்.

அவர்களுக்கும் ஒரு இலட்சம் ரூபா வழங்கியதோடு நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை மாதாந்தம் 20,000 ரூபாவை வழங்கவும் பொருத்தனை வழங்கியிருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக மாதாந்தம் கிடைக்கப்பெறும் வருமானத்தை இவ்வாறு நன்கொடையாக இவர்களுக்கு வழங்குவதாக ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + one =

*