;
Athirady Tamil News

கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்: 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்…!!

0

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மின்சார ரயிலை மறித்து ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் இயக்கப்படும் பயணிகள் ரயிலை சார்ந்தே தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளனர். ஆனால் இப்பகுதியில் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் தாமதமாக வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் தாமதமாக செல்வதாக புகார் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதனை அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல், தினமும் காலையிலும், மாலையிலும் மின்சார ரயில் 30நிமிடம் ரயில் தாமதமாக வருவதால் சரியான நேரத்திற்க்கு வேலைக்கு செல்ல முடியவில்லை என்று செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த மின்சார ரயிலை கூடுவாஞ்சேரியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் கரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து தாம்ப்பரம், செங்கல்பட்டு வழியாக மேல்மருவத்தூர், சோழன், செங்கோட்டை, மின்சார ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 15 =

*