;
Athirady Tamil News

ஜெயாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு…!!

0

தமிழக துணை முதல்வரும் – துணை முதல்வருமான ஓபிஎஸ் தற்போது 2018-19 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவையில் தாக்கல் செய்துவருகிறார்.

தமது உரையில், 2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஓபிஎஸ், கடந்த ஆண்டு ரூ.14,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை தற்போது ரூ. 23,176 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மானியம், உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஒதுக்கீடு ரூ, 75,723 கோடி எனவும், மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும் என்றும் ஓபிஎஸ் தமது உரையில் தெரிவித்தார் .

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் ஓபிஎஸ்.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியென தண்டனை பெற்ற ஒருவரின் இல்லத்தினை நினைவில்லமாக மாற்றிட அரசு தொகையை ஒதுக்குவதா என கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fifteen =

*