;
Athirady Tamil News

பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் ; வெளிநடப்பு செய்தது திமுக…!!

0

தமிழக துணை முதல்வரும், நிதி துறையை கவனித்து வருபவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவருகிறார்.

2018-19 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்பட்டுள்ளதாக பேரையில் பட்ஜெட் தாக்கல் செய்துவரும் ஓபிஎஸ் தனது உரையில் குறிப்பிட்டுவருகிறார்.

அதே சமயம், காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன் பின்னரும் மேலாண்மை வாரியத்தினை அமைத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு.

மேலாண்மை வாரியத்தினை அமைத்திட தமிழக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்துள்ளது எதிர்க்கட்சியான திமுக.

முன்னதாக, தங்களது எதிர்ப்பினை பதிவு செய்கிற வகையில் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*