;
Athirady Tamil News

வவுனியாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி நிலையம்…!! (படங்கள்)

0

இலங்கையில் முதல் தடவையாக வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (14.03) பொது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியமான திறமையான சேவையின் மட்டத்தை உயர்த்தும் வகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உடற்பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ் நோக்கத்திற்காக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்ரன அவர்கள் விளையாட்டு துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து ரூ 6.5 மில்லியன் நிதியில் வவுனியா மாவட்ட செயலகத்தில் உடற்பயிற்சி நிலையமானது அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 18 =

*