;
Athirady Tamil News

அர்ஜூனைக் கைதுசெய்யுமாறு அதிரடி உத்தரவு; விலாசத்தில் இல்லாததால் வந்த வினை..!!

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றின் அழைப்பாணை உத்தரவை சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்த பேதிலும், அவருக்கு அனுப்பப்பட்ட முகவரியில் அவர் இல்லாத காரணத்தினால் குறித்த அழைப்பாணை மீண்டும் திரும்பி வந்துள்ளது. இதனையடுத்து, இன்றைய தினம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 13 =

*