;
Athirady Tamil News

நீர்கொழும்பு – மீரிகம வீதியில் டிபர் மோதியதில் இருவர் பலி…!!

0

Remains of person
நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் பதினிகொடெல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று டிபர் வாகனத்துடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

29 வயதுடைய இளைஞர் ஒருவரும் 55 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் டிபர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*