;
Athirady Tamil News

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கவுள்ள சீனா விண்வெளி நிலையம்…!!

0

அமெரிக்காவின் மெக்ஷிகோ மாநிலத்தில் சீனாவின் தியாங்காங் விண்வெளி மையம் விழுந்து நொறுங்கவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா விண்வெளி மையமான தியாங்காங் 1 கடந்த 2011 ஆம் ஆண்டு விண்ணில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விண்வெளி நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாட்டை இழந்து செல்கின்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் விண்வெளி நிலையமானது சுமார் 8.5 டன் எடையுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 3 ஆம் திகதி 8.5 டன் எடையுள்ள விண்வெளி நிலையமானது, அமெரிக்காவின் மெக்ஷிகோ மாநிலத்தில் விழுந்து நொறுங்கவுள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மேலும் எரிந்த நிலையில் விழும் எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − thirteen =

*