;
Athirady Tamil News

முன்னாள் ரஷ்ய உளவாளி; கொலை முயற்சி – நியூசிலந்து விசாரணை…!!

0

பிரித்தானியாவில் முன்னாள் ரஷ்ய உளவாளி தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, நியூசிலந்திலும் முன்னாள் ரஷ்ய உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவமொன்று தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணலில் கலந்துகொண்டு முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்ப்பிச்கோவ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இது குறித்து, கடந்த 2006ஆம் ஆண்டில், நியூசிலந்து ஆக்லாந்து நகரிலுள்ள வீதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போரிஸ் கார்ப்பிச்கோவ் மீது சந்தேகத்திற்கிடமான பொருளை முகத்தில் வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் சுகயீனமடைந்ததாகவும் அதன் பின்னர் தனது நிறையில் மூன்றில் ஒரு பங்கை தான் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, நியூசிலந்துக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில், பிரித்தானியாவில் முன்னாள் ரஷ்ய உளவாளியைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதையடுத்து, இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது.

மேலும், ரஷ்யாவின் உளவுத்துறை தாக்க முயன்று வரும் எட்டு பேரில் தானும் பிரித்தானியாவில் தாக்கப்பட்ட சர்காய் ஸ்கிர்ப்பாலும் அடங்குவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 3 =

*