;
Athirady Tamil News

மனிதர்களின் முக தோற்றத்தில் நாய்க்குட்டி! ஆச்சரியத்தில் நெட்டிஷன்கள்…!!

0

மனித முகத்தை போன்ற தோற்றத்தை கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் வெளியாகி நெட்டிஷன்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

அந்த நாயின் கண்கள் மற்றும் வாய் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்கள் மற்றும் வாய் போன்றே உள்ளது.

குறித்த நாயின் புகைப்படத்தை பதிவேற்றியவுடன் சந்தேகமடைந்த நெட்டிசன்கள் இது போட்டோஷாப் வேலையாக இருக்கும் என கூறினர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நாயின் உரிமையாளர் மைக்கேல் எனக்கு போட்டோஷாப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. நான் எனது நாயின் புகைப்படத்தை கடந்த டிசெம்பர் மாதம் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றினேன் அது தற்போது வைரலாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வினோதமாக தெரியும் இந்த நாயையும் பிரபலமானவர்களின் முகத்தையும் ஒப்பிட்டு இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − six =

*